Thursday 17 August 2017

தமிழீழத் தேசியத்தின் மார்க்ஸியப் போர்க்குரல்- தோழர் விஷ்வா

தமிழீழத் தேசியத்தின் மார்க்ஸியப் போர்க்குரல்
தோழர் விஷ்வா

நவ-நவீன திரிபுவாதத்திற்கெதிரான முன்னணிப் போராளி!

தெற்காசிய தேசிய இனச்சிக்கல்கள் தொடர்பான நவீன திரிபுவாதக் கருத்துக்கட்டுமானத்துக்கும், மார்க்ஸிய சூத்திரவாத மற்றும் மார்க்ஸிய மாறாமரபியல்வாதக் (fundrmentalist) கருத்துக் கட்டுமானத்துக்கும் எதிரானதொரு நடவடிக்கையாக இவரின் செயலக் கருதுவதில் எத்தவறுமில்லை. இத்திருப்பு முனையை ஆரம்பித்துவைத்ததன் மூலம் மார்க்ஸிஸத்தை  தெற்காசிய சூளலுக்கொப்ப வளர்த்தெடுக்கும் திசையைத் துணிவுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தோழர் விஷ்வானந்த தேவரின் தலைமையிலான ‘NLFTE’ இடதுசாரிப் பாரம்பரியத்திலிருந்து தோன்றி, மார்க்ஸிஸ த்தை தமது சித்தாந்தமாக ஏற்றுக்கொண்ட, தமிழீழ விடுதலை அமைப்பாகும். மொழிவழித் தேசிய இனக் குழுமத்தின் (Linguistic ethnic group) தனித்தேசக் கோரிக்கை யை ஏற்றுக்கொண்டு அதற்காகப் போராட முன்வந்த இடதுசாரிப் பாரம்பரிய முதலாவது அமைப்பு இதுவேயாகும். இலங்கையில் மட்டுமல்ல தெற்காசியா விலேயே இதுதான் முதல் அமைப்பெனக் கூறலாம். தெற்காசிய தேசிய இனச்சிக்கல்கள் தொடர்பான நவீன திரிபுவாதக் கருத்துக்கட்டுமானத்துக்கும், மார்க்ஸிய சூத்திரவாத மற்றும் மார்க்ஸிய மாறாமரபியல்வாத (fundamentalist) கருத்துக் கட்டுமானத்துக்கும் எதிரான தொரு நடவடிக்கையாக இவரின் செயலைக் கருதுவதில் எத்தவறுமில்லை. இத்திருப்பு முனையை ஆரம்பித்து வைத்ததன் மூலம் மார்க்ஸிஸத்தை  தெற்காசிய சூளலுக்கொப்ப வளர்த்தெடுக்கும் திசையைத் துணிவுடன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்திசையில் நடைபோட்டும் உள்ளார். இதற்காக தோழர் விஷ்வானந்த தேவருக்கு எனது புரட்சிகர வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘NLFTE’ யின் தோற்றம்:

இரண்டாம் தலைமுறை இடதுசாரிகளின் தத்துவார்த்த இலங்கைத் தலைவராக இன்றுவரை கருதப்படும் தோழர் சண்முகதாசன் தலைமையிலான ‘இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி-சீனசார்பு’இல் இருந்து பிரிந்துசென்ற, பிரிந்துசெல்ல விரும்பிய, கட்சியின் கருத்தால் கவரப்பட்டிருந்த சிலரை உள்ளடக்கி இயங்கிவந்த ஒரு அணியின் பரிணாமவளர்ச்சியே ‘NLFTE’ ஆகும். இவ்வணி தனியணியாக மாறியமைக்கான அகநிலைக்காரண ங்கள்:-

‘இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின்(சீனசார்பு) தலைமையில் நடத்தப்பட்ட தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தின் தொடர் செயற்பாடின்மை, கட்சியின் உறுப்பினர்களும், தீண்டாமை ஒழிப்புப் போராளிகளும் எதிர்பார்த்ததுபோல் அப்போராட்டம் புரட்சிகர வடிவெடுக்காமல் முதலாளித்துவச் சீர்திருத்தப் போராட்டமாகப் பிசுபிசுத்துப் போனமை, இலங்கையின் அரசியல் சமநிலையை உழைக்கும் வர்க்கத்துக்குப் பாதகமான முறையில் செயற்பட்டுவந்த தேசியஇனச் சிக்கலையிட்டுத் திட்டவட்டமான நிலைப்பாடின்மை. இலங்கைப் பொருளாதாரத்தின் போதாமை தீர்ந்தால் அனைத்துச் சிக்கல்களும் தீர்ந்துவிடும் எனக் கிளிப்பிள்ளைபோல் மீண்டும்மீண்டும் ஒப்புவித்துக்கொண்டிரந்தமை, 

‘இலங்கைத்தே சியம்பற்றிய சிங்கள-பௌத்த பேரகங்கா ரவாதச் சார்புக் கருத்தோட்டங்கள், தொழிற்சங்கவாதம் பாராளுமன்றவாதம் ஆகியவற்றிலிருந்து முழுமையாக விடுபடாதிருந்த நிலை, விஜயவீராவின் தலைமையில் பிரிந்துசென்ற JVPயின் ‘வீரமிக்க’ சிங்களத் தேசிய இனச் செயல்களையிட்டும், அதைத்தொடர்ந்து கட்சியிலிருந்து பலகுளுக்கள் வெளியேறியதையிட்டும் கட்சித் தலைமையின் செயலற்றநிலமை, ஆகியவையே இதற்கான அகநிலைக் காரணிகளாகும்.

பிரதான புறநிலைக்காரணங்கள்:-

சிங்கள-பௌத்த தேசிய இனக் குளுமவாத நலனுக்காக, இலங்கைத் தொழிலாளிவர்க்க நலனையும், ஒடுக்கப்பட்ட தேசிய இனக் குழுமங்களின் நலனையும் முதற் தலைமுறை இடதுசாரிகள் புறக்கணித்திருந்தார்கள்.
சீனக் கலாச்சாரப் புரட்சியின் தாக்கத்தால் உருவாக்க ப்பட்ட சோஷலிஸப் போராட்ட உணர்வுகள், சோவியத் யூனியனின் சிதைவுகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள். சாருமஜும்தார் அலை, வடபகுதியில் தமிழீழ விடுதலைப் போராளிகளின் வளர்ச்சி;                    அரச கட்டுமான த்தைச் சிங்கள-பௌத்த பேரகங்கார மயப்படுத்த       ஸ்ரீ-லங்கா சுதந்திர கட்சி மேற்கொண்ட நடவடிக்கை களின் வெற்றிகள்;                          இடதுசாரி சிங்களத் தேசியவாதமென நாமம் சூட்டப்பட்ட JVP-யின் உண்மைமுகம் சிங்கள-பௌத்த தேசிய இனக் குளும-வாதமே என்பதை புரிந்து கொண்டமை;                                          இலங்கைத் தேசியக் கட்சியென நம்பியிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியும் கூட, சிங்கள-பௌத்த தேசிய இனக் குளுமவாத(Ethno-Nationalist ) கட்சியேதான் என்ற உண்மை வெளியாகியிருந்த நிலமை, செத்துப்போனதாகக் கருதப்பட்ட அமெரிக்க சார்பு யூ.என்.பியின் பிரமாண்ட மான மீளெழுச்சி;                                     சிங்கள-பௌத்த தேசியஇனக் குளுமவாத நலனுக்காக, இலங்கைத் தொழிலாளிவர்க்க நலனையும், ஒடுக்க ப்பட்ட தேசியஇனக் குழுமங்களின் நலனையும் முதற் தலைமுறை இடதுசாரிகள் புறக்கணித்திருந்தார்கள். இவ் உண்மை அம்பலமாகியிருந்த நிலைமை, ஆகியவையே உடனடி புறக்காரணிகளாகும். –

தோழர் விஷ்வாவும்
அவரை ஒத்த பிற தோழர்களும்
எதிர்கொண்ட தத்துவார்த்த நெருக்கடிகள்:

நேபாளா நிலபிரபுத்துவ அரசியல் கட்டுமான த்தையும். இந்திய அகண்டபாரத தொல்லைக ளையும் வெற்றிகரமாக எதிர்கொண்ட கட்சியால் மாதேசிச் சிக்கலையும், தலித் சிக்கலையும் எதிர்கொள்ளமுடியாது போய்விட்டது. இதனால் வர்க்கப்போராட்டக் களத்தில் தான் பெற்றவெற்றி களை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள முடியாதது மாத்திரமல்ல, அரசு அமைவுக்கான வர்க்கபோராட்டக் களத்தில் தோற்றுப்போய்வி ட்டது.

பிரதான தத்துவார்த்த நெருக்கடிகளாக பிவருவன வற்றைப் பட்டியலிடலாம்.       
அ) எவ்வகை யுத்தமுறை-  முன்னணிப்படையா? மக்கள் யுத்தமா?                                                       ஆ) தேசியஇனச் சிக்கலிலான நவ-நவீன திரிபுவாதம்,    
இ) இயக்க அராஜகவாதமா உள்நாட்டு யுத்தமா?            ஈ) புதிய ஜனநாயகப்புரட்சியா, சோஷலிஸப் புரட்சியா?  
   இத் தத்துவார்த்த நெருக்கடிகள் இன்றுவரை தொடர்கின்றன. இன்றைய நிலையை மனதில் கொண்டு இவைபற்றி எழுதுவது தோழர் விஷ்வானந்ததேவர் நடத்திவந்த கருத்தியல் போராட்டதைத் தொடர்வதா கவும், அவருக்குச் செய்யப்படும் நன்றிக்கடனாகவும் இருக்கும் எனக் கருத்துகிறேன்.

இத் தத்துவார்த்த நெருக்கடிகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவைகளாகும். இவ் நெருக்கடிகளின் அடிப்படை தேசிய இனச்சிக்கல்பற்றிய நவ-நவீன திரிபுவாதக் கருத்துக் கட்டுமானமேயாகும். இது தெற்காசியா முழுமைக்கும் பொதுவானதாகவும் உள்ளது. இப்பிராந்திய தேச உருவாக்கம் தொடர்பான சமூக நிகழ்வுப்போக்கைச் சரியாகப் புரிந்துகொள்ள வில்லையானால், தேசியத்தையும் சாதியத்தையும் சரியாகப் புரிந்துகொள்ளமுடியாது, வர்க்கப் போராட்ட த்தையும் சரியாகப் புரிந்துகொள்ளமுடியாது. தனித்து அரசமைக்கக்கூடிய நிலைக்கு வளர்ந்திருந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(மா-ஓ) தனது தவறான புரிதல்களால், நேபாள நவ-காலனியல் அரசியல் கட்சிகளுடன் ஆட்சியைப் பங்கீட்டுக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தாழ்ந்து சென்றதை நினைவில் கொள்ளவேண்டும். நேபாளிய தலித்திய சிக்கலையும், நேபாளிய தேசிய இனக்குளுமச் சிக்கலையும் பற்றிய சரியான புரிதல்இல்லாததே இதற்கான காரணமாகும். நேபாளா நிலபிரபுத்துவ அரசியல் கட்டுமானத்தையும். இந்திய அகண்டபாரத தொல்லைகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்ட கட்சியால் மாதேசிச் சிக்கலையும், தலித் சிக்கலையும் எதிர் கொள்ளமுடியாது போய்விட்டது. இதனால் வர்க்கப்போராட்டக் களத்தில் தான் பெற்ற வெற்றிகளை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள முடியாதது மாத்திரமல்ல, அரசு அமைவுக்கான வர்க்கபோராட்டக் களத்தில் தோற்றுப்போய்விட்டது. ஆகவே, அரச அமைவுக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அதேவேளை. தொடர் தொல்விகளைத் தவிர்க்க வேண்டுமானால், இத்தத்துவார்த்த நெருக்கடியில் இருந்து தமிழீழ சமதர்மப் போராளிக ளாகிய நாமும், எமது மக்களும் வெளிவரவேண்டும் 


முதலாவது நெருக்கடி:-
முன்னணிப் படையுத்த முறையா? 
மக்கள் யுத்த முறையா?

மு.ப.யு.முறை ஆயுதத்தை முதன்மைப்படுத்தி அரசியலை ஆயுதத்தின் அடிமையாக் குகின்றது. மக்கள் யுத்தமுறை ஆயுதத்தின் முக்கியத்துவத்தை மறுக்கவில்லை, “அரசியல் அதிகாரம் துப்பாக்கிக் குளலிருந்துதான பிறக்கிறதுஎனற அரசியல் அரிச்சுவடியையும்  மறுக்கவில்லை. ஆனால் துப்பாக்கிமுனை அரசியலை ஆளக்- கூடாதென்கிறது. சமுதாயத்தில் ஆயுதத்திற்கு வளங்கப்பட்டுள்ள தலைமைப் பாத்திரத்தை யும், ஆதிக்க நிலையையும் இல்லாதொழிப் பதையும், உணர்வுபூர்வமாக அணிதிரண்ட வெகுஜன அரசியலணியை சமூதாயத்தின் தலைமைப் பாத்திரத்துக்குக் கொணர்வதை யும் தனது தொலைதூரக் குறிக்கோளாகக் கொண்டது.
 “அரசியலதிகாரம் துப்பாக்கிக் குளலில் இருந்தே பிறக்கிறது” என்ற நம்பிக்கையுடன், அக்காலப்பகுதியில் இரண்டாவது இடதுசாரிப் பாரம்பரியத்தில் இருந்து தோன்றிய மூன்று குளுக்களில் மூன்றாவது குளுவே ‘NLFTE’-யாகும். முதற் குளு JVP. இது நடந்தது 1969இல். இரண்டாவது குளு கீழைக்காற்று. இது நடந்தது 1970இல். இக்குளு தடைசெய்யப்பட்டதாலும், இதன் தலைமைத் தோழர் காமினி யாப்பா, சிறைபிடிக்கப்பட்டதாலும், உள் முரண்பாடுகளின் காரணத்தாலும் இக்குளு சிதைவு நிலையை அடைந்தது. இருந்தாலும் PRoVA என்ற பெயரில் இது தன்னை மீழமைத்துக்கொள்ள முற்பட்டது, ஆனால் பலன் கிடைக்கவில்லை. இலங்கைத் தேசியம் பற்றிய நவ-நவீனக் கருத்துக் கட்டுமானத்திலிருந்தும், சாதியத்துக்கும் தமிழ் தேசியத்துக்கும் இடையேயான உறவைப்பற்றிய நவ நவீனக் கருத்துக் கட்டுமானத்தில் இருந்தும் முழுமையாக விடுபடாதிருந்ததே இதற்கான காரணங்களாகும்.

‘NLFT’யின் வரவும் கீழைக்காற்றின் சிதைவும் ஒரேகாலப் பகுதியில் நடந்தன. சில வருடங்களில் ‘NLFT’யும் சிதைந்துவிட்டதாகவே கருதுகிறேன். ஆனால், ‘NLFT’யின் பலமான வளர்திசைக் கருத்துக்கட்டுமானங்களை அடித்தளமாகக் கொண்டு PLFT எனும் குளு தோற்றம்பெற்றது. இவற்றுள், முதல் குளுவான JVP, இலங்கையின் சிங்கள-பௌத்த பேரகங்காரவாத அரசியல் கட்டுமானத்தில் அழியாத இடம் பிடிப்பதில் வெற்றி பெற்றுவிட்டது.

இவ்விதம் பல குளுக்கள் தோன்றினாலும் இரண்டாவது தலைமுறையினரின் தாய்க்கட்சி இறந்துவிடவுமில்லை, சிதைந்து அழிந்துவிடவுமில்லை. இறுதிக் காலத்தில் தொழர் சண் கட்சியின் கடந்தகாலத் தவறுகள்பற்றி விமர்சனமும் சுயவிமர்சனமும் செய்துள்ளார். கட்சியைச் சீர்செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டார். அவரின் மறைவுக்குப்பின்னர் கட்சிக்குள்நடந்த பலகட்ட கருத்தாய்வுகளின் பின்னர் கட்சித்தலைமை தோழர் சண்ணை மகத்தான ஆசானாகப் பிரகடனப்படுத்தியது. இந்திய கம்யூனிஸ்ட் குளுக்களின்(மா-ஓ) வளர்ச்சியிலும் ஒன்றிணைப்பிலும் அவர்வகித்த பங்கினை வெளிக்கொணர்ந்தது. தோழர் சண்ணின் முயற்சியால் அக்கட்சி இன்று தெற்காசிய கம்யூனிஸ்ட் ஒன்றியத்தில் உறுப்பினராகவுள்ளது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மா-ஓ) எனும் பெயரில் செயல்படும் அக்கட்சியினர் தற்போது JVPக்கும், ஸ்ரீ லங்கா அரசிற்கும் எதிரான போராட்ட ங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். விடுதலைப்புலிகள் இயக்கத்தையும், அதன் போராட்டங்களையும் ஆதரித்தா ர்கள். ஆயிரம் பூக்கள் எனும் பெயரில் ஒரு சஞ்சிகையும் நடத்திவருகிறார்கள். அதன் முதலாவது இதழ் மார்ச்-2008இல் வெளியானது. இவ் இதழ் கட்சியின் அறிக்கையாகவும் திகழ்கிறது. தெற்காசிய மாஓயிஸ்டுகளின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் KASANA எனும் இணைய இதழில் அவர்களைச் சந்திக்கலாம்.

JVP, ‘NLFT’, கீழைக்காற்று, CPC(Mao) ஆகிய அமைப்புகள் ஆயுதப்போராட்டத்தை ஏற்றுக்கொள்வதில் ஒத்தகருத்து க்களுடன் இருந்தாலும், எவ்வித ஆயுதப் போராட்டம் எனபதில் இவர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. JVP முன்னணிப்படை யுத்தமுறையையே ஏற்றுக்கொண்டது. ‘NLFT’ ஆரம்பத்தில் மக்கள் யுத்த முறையை ஏற்றுக் கொண்டிருந்தாலும், காலப்போக்கில் அக்கருத்தை மாற்றிக் கொண்டது போல் தெரிகிறது. மக்கள் யுத்தமுறையை வலியுறுத்திய PLFT யின் தோற்றத்திற்கு இம் முரண்பாடும் ஒரு காரணமென அவ்வமைபின் 1984ஆம் ஆண்டின் அரசியல் அறிக்கை யின்மூலம் அறியக்கூடியதாகவுள்ளது. வேறு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. கீழைக்காற்று இயக்கம் மக்கள் யுத்த முறையையே ஏற்றுக்கொண்டது என்பதையும் அதேவேளை முன்னணிப்      படைமுறை பிற்போக்கானதென முற்றிலும் நிராகரிக்கவில்லை என்பதையும் PRoVAவின் நவசகாப்தம் முதலாவது இதழில் வெளியான கட்டுரை வாயிலாக அறியக்கூடியதாய் உள்ளது. ஆனால், முன்னணிப்படை முறையையும் கூடவே பின்பற்றியிருந்தால் சிதவைத் தடுத்திருக்கலாம் என்பதே கீழைக் காற்றின் சிலரின் கருத்தாக இருந்தது.

 கம்யூனிஸ்ட் கட்சியால் நடத்தப்பட்ட தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகவே அமைந்திருந்தது. மக்கள்யுத்தமுறையின் ஆரம்பவடிவம் எனக்கருதலாம். மக்கள்யுத்தமுறைக்கு ஒரு எடுத்துக்கா ட்டாகவும் கருதலாம். CPC(Mao) மக்கள்யுத்த முறையையே தமது யுத்த முறையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், LTTEஆல் பின்பற்றப்பட்டுவந்த முன்னணிப் படையுத்த முறையை ஆதரிக்கின்றனர். இது ஒரு முரணாகத் தெரியலாம். அது முன்பின் முரணானதல்ல. கியூபாவில் பெடல் கஸ்ரோ பின்பற்றியது முன்னணி ப்படை யுத்தமுறையே என்ற கருத்தும் நிலவுகிறது. இது கற்கப்படவேண்டியதொரு பிரச்சனையாகும்.

முன்னணிப்படை யுத்தமுறையா?(மு.ப.யு.ம) மக்கள் யுத்த முறையா?(ம.யு.மு) என்பது சுத்த இராணுவவிவகார மாகவே புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அது உண்மை யல்ல. யுத்தமுறையானது ஒரு  அரசியல் விவகார மாகும். சீனாவையும், கியூபாவையும் மனதிலிருந்து அகற்றிவைத்துவிட்டு 1940க்குப் பின்பான தெற்காசியசூளலை மனதிலிருத்தி இவ்விருமுறைகளை யும் விவாதிப்போம். மு.ப.யு.மு ஆயுதத்தை முதன்மைப்படுத்தி அரசியலை ஆயுதத்தின் அடிமையாக் குகின்றாது. மக்கள் யுத்தமுறை ஆயுதத்தின் முக்கியத்துவத்தை மறுக்கவில்லை, “அரசியல் அதிகாரம் துப்பாக்கிக் குளலிருந்துதான பிறக்கிறதுஎனற அரசியல் அரிச்சுவடியையும்  மறுக்கவில்லை. ஆனால் துப்பாக்கி முனை அரசியலை ஆளக்கூடாதென்கிறது. சமுதாய த்தில் ஆயுதத்திற்கு வளங்கப்பட்டுள்ள தலைமைப் பாத்திரத்தையும், ஆதிக்க நிலையையும் இல்லாதொழிப்ப தையும், உணர்வுபூர்வமாக அணிதிரண்டவெகுஜன அரசியலணியை சமூதாயத்தின் தலைமைப் பாத்திரத்துக்குக் கொணர்வதையும் தனது தொலைதூர குறிக்கோளாகக் கொண்டது.

மு.ப.யு.முறையோ: இதற்கு மாறாக அரசியல் துப்பாக்கி முனைக்குக் கட்டுப்பட்டது என்கிறது. மக்களை தலைமைவளிபாடுடைய, கட்சி/இயக்க வழிபாடுடைய மந்தைக் கூட்டங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. ம.யு.மு-யோ ஆயுதங்களை மக்களின் நண்பர்களாக்குவதை நோக்கமாகக்கொண்டது. மு.ப.யு.முறையோ மக்கள் ஆயுதங்களைக்கண்டு அஞ்சிநடுங்குபவர்களாக இருக்கவேண்டுமென்பதை நோக்கமாகக்கொண்டது. 
மக்கள் யுத்த முறையின் குறிக்கோள் சமூகப் புரட்சியாகும். நிலவும் சமூகக்கட்டுமானத்தில் காணப்படும் வர்க்க அதிகாரத்தையும், வர்க்க உறவுகளையும், சமூக-குழும உறவுகளையும்(சாதிய, பாலின உறவுகள்) தூக்கியெறிந்து விட்டு அவ்விடத்தில் உழைக்கும் மக்களின் வர்க்க அதிகாரத்தையும், அம்மக்களின் நலனுக்குகந்த வர்க்க உறவுகளையும், சமூக குழும உறவுகளையும்  நிறுவு வதை நோக்கமாகக் கொண்டது. 
மு.ப.யு.மு­ற்யைளர்களோ நிலவும் சமூகக் கட்டுமான த்தில் எந்த அடிப்படைமாற்றத்தையும் செய்வதை நோக்கமாகக் கொண்டவர்களல்ல. ஆளப்படும் வர்க்கம் தொடர்ந்து ஆளப்படு-வதற்குப் பொருத்தமானதாக முன்கூறிய அனைத்தையும் சீர்செய்வதே அவர்களின் குறிக்கோளாகும்.

ம.யு.முயா? மு.ப.யு.முயா? என்பது ஒரு இராணுவ விவகாரமல்ல, இது ஆயுதப் பயன்பாடு தொடர்பான அரசியல் விவகாரமே என்பதற்கு இவ்வளவு எடுத்துக் காட்டுகளும் போதும். ஆகவே மக்கள் யுத்தவாதிகள், அவசியப்படில் முன்னணிப் படை யுத்தநடவடிக்கை களிலும் ஈடுபடலாம். அது அவர்களால் முடியும். இது பற்றிய விவாதத்தை தனித்த தலைப்பின் கீழ் தொடர்வோம்.
2வது நெருக்கடி:-
தேசிய இனச் சிக்கலிலான
 நவ-நவீன திரிபுவாதம்

இலங்கை இடதுசாரிகளின் 2வது தலைமுறயினரின்(மா-ஓ பிரிவினரின்) வாரிசுகளான இவ்நான்கு அமைப்புகள்பற்றிய ஆய்வுக்குரிய அடுத்தவிடயம், இலங்கையின் தேசியஇனச் சிக்கல்பற்றிய Ethnic complexity இவர்களின் கருத்தியல் நிலைப்பாடாகும்.
இரண்டாம் தலைமுறை இடதுசாரிகளின் வாரிசுகளில் இரு பிரிவினர் இலங்கையில் உள்ளனர். 
                     முதலாவது பிரிவு, தெற்காசியப் பிராந்திய உடன் புரட்சி சோஷலிசப் புரட்சி எனக் கூறும்-ட்ரொக்ஸிய பிரிவு.                                                                                இரண்டாவது பிரிவு- தெற்காசிய நாடுகளின் உடனடி சமூகப்புரட்சி, புதிய ஜனநாயகப் புரட்சி எனக் கூறும் மாஓபிரிவினர்.

முன்னர் குறிப்பிட்டப்பட்ட நால்வரும் இரண்டாம் தலைமுறையின் மாஓபிரிவைச் சேர்ந்தவர்களேயாகும். இப்பிரிவை இலங்கையில் அறிமுகம் செய்துவைத்த வரும் அதை குறிப்பிட்டதூரம்வரை வளர்த்தவரும் தோழர் சண்ணேயாகும்.                                சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான உலக- ளாவிய சித்தாந்தப் போராட்டம், இலங்கையிலும் நடத்தப்பட்டது. சீனசார்பு அணியினர் இதை நவீன திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டம் என அடையாளப் படுத்தினர். பீட்டர் கெனுமன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியே நவீன திரிபுவாதத்தின் அரசியல் தலைமை அமைப்பாக இனங்காட்டப்பட்டது. நவீன திரிபுவாதத்திற்கு எதிரான கருத்துக்கட்டுமானந்தான் இலங்கையின் மாஓயிசம் எனப் பலராலும் கருதப்பட்டது.
ஆனால், இலங்கையில் மாஓயிஸக் கருத்துக் கட்டுமானம் ஒன்று முறையாகத் தோற்றுவிக்கப்பட வில்லை. நவீன திரிபுவாதத்திற்கெதிரான போராட்ட மென்ற பெயரில் நடந்ததுவோ நவீன திரிபுவாதிகளென அடையாளப்படுத்தப்பட்ட தலைவர்களை அரசியல்ரீதியா கவும், தொழிற்சங்கரீதியாகவும் தனிமைப்படுத்து வதற்கான போராட்டங்களாகவே இருந்தன. அதாவது, நவீன திரிபுவாதத்திற்கு எதிரான தத்துவார்த்தப் போராட்டம் கட்சி அரசியல் போராட்டமாகத் தரம்தாழ்ந்துபோனது.                                 ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக்கொண்ட குழுக்களில் JVP தேசிய இனவாத அமைப்பாக மாறியதால், அவ் அமைப்பை ஒதுக்கிவிட்டு பிற மூன்று அமைப்புகளை மாத்திரம் கணக்கில் எடுத்துக் கொள்வோம். இம் மூன்று அமைப்புகளும் நவீன திரிபுவாதத்திற்கெதிரான போராட்டத்தைத் தொடர்ந்தன. இதில் தோழர் விஷ்வானந்த தேவருக்கு ஒரு பெரும் பங்குண்டு.
 பிரித்தானிய எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது இலங்கைத் தேசியமென தவறாகப்புரிந்து கொண்டிருந்த நாட்டுப்பற்று வாதமும் (patriotism) வளர்ந்தது, அதனுடன் கூடவே சிங்கள-பௌத்த இனக்குளும தேசியமும்-Sinhala-Buddhist ethno-nationalism) ஓங்கி வளர்ந்தது. இலங்கை நாட்டுப்பற்றுவாதத்தை வளர்ப்பதில் முதற் தலைமுறை இடதுசாரிகள் கணிசமான பங்கினை வகித்தார்கள். ஆனால், அவர்களின் முயற்சிகள் அவர்கள் காலத்திலேயே தோல்விகண்டன. அவர்களின் தோல்விக்கு அவர்களும் ஒரு காரணமாக இருந்துள்ள னர். எவ்விதம் என்பதை நோக்குவோம்.

பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட நாடுகளை தேசமெனக் கருதியதும், அந்நாட்டரசுகளை ‘தேச அரசுகள்எனவிளங்கிக் கொண்டதுவுந்தான் நவீன திரிபுவாதமாகும். பிரித்தானியர்கள் தெற்காசியப் பிராந்தியத்திலிருந்து மகிழ்ச்சியுடன் வழியனுப்பிவைக்க ப்பட்டனர். அவர்கள் விடைபெற்றுச் செல்லும்போது, குலங்கள்/சமூகக் குளுமங்கள் தேசிய ஜனநாயக உரிமைகள் உடையவர்களாக மாறும் தேசிய இன உருவாக்கம்(Ethno-Nationalist Group) எனும் சமூக நிகழ்வுப்போக்கு இப்பிராந்தியத்தில் எந்தவொரு இடத்திலேனும் முடிவடைந் திருக்கவில்லை. அதாவது வளர்ந்துவந்த குலங்கள்/சமூகக் குளுமங்கள் அனைத்தும் இனக்குளும தேசியங்கள் (ethno-nationalism) என்ற கட்டத்தைக்கூட எட்டாதநிலையே இருந்தது. இன்றும் அந் நிலையே தொடர்கிறது. யதார்த்த நிலை என்னவென்றால் சில குலங்கள் இன்றுவரை குலங்கள் என்ற தேசிய் குழும நிலைக்குக்கூட வளர அனுமதிக்க ப்படவில்லை. ஒடுக்கப்பட்ட இவர்களை “பழங்குடியினர்என நாகரிகமாக அழைத்துக் கொள்கிறோம். 

தேசம், தேசியம், தேச அரசு ஆகியன பற்றிய யதார்த்தத்திற்கு பொருந்திவராத, உண்மைக்குப் புறம்பான கருத்துக்கட்டுமானந்தான் நவீன திரிபுவாதமாகும்.

இரண்டாம் தலைமுறை இடதுசாரிகள் தலையெடுத்து ஒரு சிலவருடங்களிலேயே  இலங்கை அரசு முற்றுமுழு சிங்கள-பௌத்த பேரகங்கார இனக்குழும தேச அரசாக -Sinhala-Buddhist ethno-nationalist chauvinist state) மாறியிருந்தது. இதன் பெயரே ஸ்ரீ லங்கா அரசு. நவீன திரிபுவாதிகளுக்கு எதிரான மார்க்ஸியப் போராளிகள் இதைக் கண்டுகொள்ளவேயில்லை. தேச உருவாக்கம் என்ற சமூக நிகழ்வுப் போக்கு முடிவடைந்துவிட்டது என்றே இவர்களும் கருதினார்கள். இனக்குழும பேரகங்காரவாத தேசஅரசை பல்-தேச அரசாக(multi-nation state) மாற்ற வரும்படி அறைகூவல் விடுத்தார்கள். முதலாளித்துவ அரசை சம்தர்ம அரசாக ஆக்கலாம் என வாதிட்டவர்களல்லவா? இதனால் நவீன திரிபுவாதிக ளுக்கு எதிரான போராளிகள் தம்மட்டில்தாமே நவீன திரிபுவாதிகளாக இருந்தார்கள். (கீழைக்காற்று இவர்களை நவ-நவீன திரிபுவாதிகள் என அழைத்தது. இந்தோநேசிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஐடிர்ரையும், சண்ணையும் ஒப்பிட்டுக் காட்டி விமர்சித்தார்கள்). இது தெற்காசியா முழுமைக்கும் பொருந்தும்.

மார்க்ஸியர்களின் வேலைத்திட்டத்தில், தமிழீழத்து க்கான போராட்டத்தையும் இணைத்ததானது நவ மற்றும் நவ-நவீன திரிபுவாதத்திற்கு எதிரான மார்க்ஸிஸத்தின் வெற்றியாகும். இந்த முறையில் இலங்கையின் மார்க்ஸிஸ-லெனினிஸ-மாஓயிஸ வரலாற்றில் தோழர் விஷ்வா ஒரு மைல்கல்லாக அடையாளப்படுத்தப் படவேண்டும். நாட்டரசு-தேசஅரசு; நாட்டுப்பற்று-தேசப்பற்று பற்றிய விவகாரங்கள் இன்னும் விரிவாக விவாதிக்கப்படவேண்டும். தெற்காசிய சூளலில் இவை இரண்டையும் ஒன்றையொன்று நிராகரிக்காதமுறையில், ஒன்றையொன்று அடிமைப்படுத்தாத முறையில் எவ்விதம் இணைத்துச் செல்வது என்பதுபற்றி விவாதிக்கவேண்டும். ஓர் நாடு ஈர் தேசம் எனும் கோட்பாடு மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ளவேண்டும். 

மூன்றாவது நெருக்கடி:-
இயக்க எதேச்சதிகாரமா? 
உள்நாட்டு யுத்தமா?

தமிழீழத் தற்காப்பு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில் தமிழீழத்துள் ஒரு உள்நாட்டு யுத்தமும் நடைமுறையில் உள்ளது. இவ் உள்நாட்டு யுத்தம் அரசியல், இராணுவ, பொருளாதார ஆகிய முத்தளங்களிலும் நடைபெற்றுவரு கிறது. அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். மலைத்துநிற்பதில் எந்த ப்பலனும் இல்லை.

தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தினில் இயக்க அடிபாடுகளும், அமைப்புகளுக்கிடையேயும், அமைப்புக ளுக்குள்ளேயும் நடைபெறும் களையெடுப்புகளும், கொலைகளும்; அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் பிற சுத்திகரிப்புக் கொலை களும்  சர்வசாதரணவிடயங்களாக இருந்தன. இது மனிதாபிமானமற்ற செயல், பாசிஸச் செயல், அடாவாடித்தனம், எதேச்சதிகாரப் போக்கு எனப் பலராலும் கண்டிக்கப்பட்டுவந்தது. இன்றுவரை கண்டிக்கப்பட்டும் வருகிறது. இவ்விவகாரங்களை மனிதாபிமான நோக்குநிலையிலிருந்து அணுகுபவர்களே அதிகளவினராக உள்ளனர். குறிப்பாக இதற்காக, LTTEஐக் கண்டிப்பதில் நாட்டமுள்ளவர்களே அதிகமானவர்களாக உள்ளனர். ஸ்ரீ லங்கா அரசுடனோ இந்திய அரசுடனோ அல்லது ஐரோப்பிய அரசுகளுடனோ தொடர்புவைத்தி ருந்த பிரதான ஐந்து அமைப்புகளில் எந்த அமைப்பு இவ்விதச் செயல்களில் ஈடுபடாதிருந்துள்ளது? இவ் ஐந்து அமைப்புகளும் முன்னணிப்படை யுத்தமுறைவாதிகள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இவ் இயக்கங்களின் வழித்தோன்றல்களாக உருவான சிற்சிறு அமைப்புகள் கூட இவ்வித நடவடிக்கைகளில் கைதேர்ந்தவர்களாகவே இருந்துள்ளனர். ஆகவே அனைத்து இயக்கங்களையும் ஒட்டுமொத்தமாக சாடுவதில் பலர் தயங்குவது ஏன்? குறிப்பிட்ட சில இயக்கங்களை மட்டும் குறிவைப்பது ஏன்? அதிலும் LTTEஐ மட்டும் தனியாகக் குறிப்பிடுவது ஏன்? அவ்விதமானால் இதில் எந்த அமைப்-பையாவது தமிழீழத் தேசத்துரோக அமைப்பென்றோ, தமிழீழத்தில் இருந்து முற்றாக அழித்தொழிக்கப்படவேண்டிய அமைப்பென்றோ சொல்பவர்கள் எவராவது உள்ளார்க ளா? தோழர் விஸ்வாவைக் கொலைசெய்ததாகக் கருதப்படும் LTTE ஐத் தவிர வேறெவரும் அவ்விதம் கூறியுள்ளதாகத் தெரியவில்லை. அனைவரும் செயலளவில் கொலைகாரர்களாக நடந்திருந்தாலும், பேச்சளவில் சகோதர அமைப்புகளாக ‘நடந்துள்ளார்கள். எதேச்சதிகார மற்றும் அடாவடித்தனச் செயல்களுடன் எமது இருத்தலையும் “சகோதரத்துவத்தையும் தொடர்வோமென பிற இயக்கங்கள் விரும்ப, இவை இரண்டையும் ஒழிப்பதானால் அனைத்து இயக்க ங்களையும் ஒழித்துக்கட்டுவதே ஒரேவழியென LTTE கருதுகிறதென இதை அரத்தப்படுத்தலாமா? நடைமுறை-யிலும் குழப்பம் தத்துவார்த்தத்திலும் குழப்பம்.

 ‘NLFTE’ தனது முதலாவது அரசியல் அறிக்கையில் இவ்வித நிலையின் இருத்தலுக்கான தத்துவார்த்த காரணத்தையும் அதற்கான தீர்வுக்கான பொது அரசியல் வளிகாட்டலையும் முன்வைக்கின்றது. தமிழீழத் தற்காப்பு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில் தமிழீழத்துள் ஒரு உள்நாட்டு யுத்தமும் நடைமுறையில் உள்ளது. இவ் உள்நாட்டு யுத்தம் அரசியல், இராணுவ, பொருளாதார ஆகிய முத்தளங்கலிலும் நடைபெற்றுவருகிறது. அவற்றை எதிர்கொள்ளத் தயாராகஇருக்கவேண்டும். மலைத்து நிற்பதில் எந்தப்பலனும் இல்லை. இக்கூற்றில் ஆழ்ந்தபல உண்மைகள் உள்ளன, இது விரிவாக விவாதிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

முன்னணிப்படை யுத்தவாதிகள் அனைவருமே ஆயுத மோகிகளேயாகும். ஆயுத மோகத்தின் அடுத்தபக்கம் பிறர்கையில்இருக்கும் ஆயுதங்களை ஒட்டிய அச்சமாகும். அச்சுறுத்துவதுவும், அஞ்சுவதுவும் முன்னணிப்படை யுத்தவாதம் எனும் நாணயத்தின் இரு பக்கங்களாகும்.

4வது நெருக்கடி:-
புதிய ஜனநாயகப் புரட்சியா? 
சோஷலிஸப்புரட்சியா?

கருத்தியல் கட்டுமானத்தில் புதிய ஜனநாயகப் புரட்சியா? சோஷலிஸப் புரட்சியா எனும் தர்க்கம் நாள்பட்டுப்போன தொன்றாகிவிட்டது. இதுபற்றிய தர்க்கம் இனியும் வேண்டுமாவெனக் கேடகப்படலாம். நியாயமான கேள்வி. தமது திட்டம் இதுதானென ஊரறிய உலகறிய முழங்கிவிட்டு, நிலவும் கட்டுமானத்தைப் பாதுகாத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது பற்றிய தர்க்கம் அவசியமில்லாத தொன்றுதான். தமிழீழப் போராட்ட த்தில் ஈடுபடும் மக்களுக்கும், பல்வேறு குழுமங்க ளுக்கும், மார்க்ஸியர்களுக்கும் இது அவசியமானதொரு தர்க்கமாகவுள்ளது. விடுதலைப் போராட்டமானது ஸ்ரீ லங்கா இராணுவத்துக்கு எதிரான இராணுவ நடவடி க்கையாக மட்டும் இருக்கமுடியாது. போராட்டத்தின் போதே பல்வேறுவிதமான பொருளாதார நடவடிக்கை களில் ஈடுபடவேண்டியது கட்டாயமாகிறது. பொருளா தார அழிவுகளை எதிர்கொள்ளல், பொருளாதார முற்றுகையை முறியடித்தல், பொருளாதாரப் போதாமையை நிறைவுசெய்தல், பொருளாதாரவிருத்தி க்கு அவசியமான போர்க்காலப் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளல், வளப்பகிர்வில் தொடர்சியான மாற்றங்களை உருவாக்கல், இவை அனைத்தையும் நடத்திச்செவதற்கு உகந்த முறையி லான  நிறுவனக் கட்டுமானங்களை உருவாக்கல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவை தவிர நிலைகுலைந்துள்ள சிவில் ஒழுங்குகளை சரிசெயதல், அவற்றைப் பாதுகாப்பதாற்கான சிவில் கட்டுமானங்க ளைப் பராமாரித்தல், வெகுஜன பாதுகாப்புக்கு அவசிய மான கட்டுமானங்களைப் பேணல், போர்க்கால சூளலுக்கேற்ற முறையிலான பண்பாட்டுக்கூறுகளையும், சமூக நியமங்களையும், விழுமியங்களையும் உருவாக்கல் ஆகிய கடமைகளையும் இங்கு குறிப்பிட லாம்.  ஆகவே, புதிய ஜனநாயகப் புரட்சியென முடிவெடு த்துவிட்டு இராணுவத்தை வெல்லும் வரை பொறுத்திருப்போருக்கு இது தர்க்கத்துக்குரிய ஒரு விடயமல்ல. ஆனால், தமீழீழ போர்களத்தில் இருக்கும் சமூகமாற்ற விரும்பிகளுக்கும், போர்ப் பாதிப்புகளுக்கு உள்ளாகும் மக்களுக்கும் இது பிரதானது. தமது ஒவ்வொரு நடவடிக்கைகளும் புதிய ஜனநாயகக் கோட்பாட்டிற்கொப்ப அமைகிறதா என்பதையிட்டு அவர்கள் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும். இவ்விழி ப்புணர்வு அவர்களின் நாளாந்தப் பிரச்சனையாகிறது. NLFTEயின் முதலாவது அரசியல றிக்கை இதுபற்றி தனியாக எதுவும் சொல்லாவிட்டாலும் இது பற்றிய புரிதல் இயக்கத்துக்கு உண்டென்பதை அவ்வறிக்கை வெளிப்படுத்துகிறது.

நவீன திரிபுவாதிகளும், நவ-நவீன திரிபுவாதிகளும் (நாட்டரசுகளை தேசிய அரசுகளாக அடையாள ப்படுத்திவருபவர்கள்) அரைக்காலனியல் தேசங்களிலான புதிய ஜனநாயகப் புரட்சி பற்றித்தான் பேசினார்கள். இல்லாததொரு தேசத்தில் புதியஜனநாயகப் புரட்சிபற்றிப் பேசுகிறார்கள். இது தேச உருவாக்கத்திற்கான புரட்சியை மறைப்பதற்கானதோர் அரசியல் சதியாகும். ஆனால், NLFTE, நாட்டரசுகளால் ஏவிவிடப்படும் மறு காலனியல் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் ஊடாக தேசங்களாக உருவாகிவரும் தேசிய இனக் குழுமங்களின் புதிய ஜனநாயகப் புரட்சிபற்றிப் பேசுகிறது. தேச உருவாக்கத்திற்கான தேச விடுதலைப் போராட்டத்தையும் புதிய ஜனநாயகப் புரட்சியையும் எவ்விதம் ஒன்றிணைப்பது என்பதுபற்றிப் பேசுகிறது. அதாவது ஒரே நேரத்தில் இரு புரட்சிகளையும் பற்றிப் பேசுகிறது. இரு புரட்சிகளின் அவ்சியத்தையும் வலியுறுத்துகிறது. இதே தலைப்பின் கீழ் இதுபற்றி விரிவாக ஆராய்வோம்.

முடிவாக தெற்காசிய நிலமைக்குப் பொருத்தப்பாடான முறையில் மார்க்ஸிச ஆய்வுமுறையை பிரயோகிப்பதில் விசுவின் பங்கு மகத்தானது. ஆனால், மரணத்தை வென்ற அவர் இன்னமும் வெற்றிபெறவில்லை. அதை வெற்றிக்கிட்டுச் செல்வதற்கான முயற்சிகளை நாம்தான் தொடரவேண்டும்.


__________________________________________________________________________________________________________________________________________________________________________________________
முடித்தது 16/08/2007






No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...