Sunday 4 June 2017

ஆரிய இனவாதமும் திராவிட இனவாதமும் ஒரெ குட்டையில் ஊறிய மட்டைகளா?

 Arinesaratnam Gowrikanthan-

ஆரிய இனவாதமும் (racism),
திராவிட இனவாதமும்(racism) ஒரே தாயின் கருவில் பிறந்த இரணைப்பிள்ளைகள் என நீங்கள் கூறவருவது புரிகிறது. அதில் உண்மையும் உள்ளது


ஆனால், காலனியகால அதிகாரப் பகிர்வின் போதும், “சுதந்திர இந்திய தேசத்தின் அதிகாரப் பகிர்வின் போதும் ஆரியம் ஆளும் இனவாதமாகியது. இந்துத்துவமெனும் மத ப்(f)னாரிஸ வடிவம் கொண்டது. பார்ப்பனியத்தைத் தனது சித்தாந்தாந்தமாக ஏற்றுக்கொண்டது. பார்ப்பனியர்களை அதிகார சாதியாக நிலைநிறுத்தியது


அடுத்த பக்கத்தில், திராவிட இனவாதமோ ஆளப்படும் இனவாதமாகியது. இதுவும் பார்ப்பனியத்தை தனது சித்தாந்தமாக ஏற்றுக்கொண்டது

ஆனால், பார்ப்பனர்கள் அதிகார சக்தியாக இருப்பதை மூர்க்கமாக எதிர்த்தது. இந்த எதிர்ப்பு பல சமூக சீர்திருத்தங்களை அவசியப்படுத்தியது. இவ்வித சீர்திருத்தங்களில் ஒன்றுதான் சமூக நீதீ இ்யக்கமாகும்


பார்ப்பனியர்கள் அல்லாத ஜாதி இந்துக்களை சமூகத்தின் அதிகாரசக்தியாக மாற்றுவதே திராவிட இனவாதத்தின் குறிக்கோளாகும். வல்லரசுகளுடன் நண்பர்களாக இருப்பது, இந்திய புவிப்பரப்பையும் அதன் மக்களையும் அந்நியர்களுக்கு விற்பது, சாதிய படிநிலை சமூகத்தைப் பாதுகாப்பது, வர்க்க ஒடுக்குமுறையை மேலும் மேலும் அதிகரிப்பது, விதேசியர்களுடன் கைகோர்த்தவண்ணம் தேசிய எழுச்சிகளை அடக்குவது அல்லது சமரசப்போக்கிற்க்கு உள்ளாக்குவது ஆகியவை இரு இனவாதங்களின் பொதுவான அம்சமாகும்.


அதாவது மூலோபாய ரீதியில் நோக்கினால் இரு இனவாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான. இரு அணியினரும் சமதர்மத்துக்கு எதிரானவர்கள்தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை


ஆனால், உத்திரீதியில் நோக்கினால் திராவிட இனவாதிகளிடம் சில முற்பொக்குச் சீர்திருத்த குணாசங்கள் உண்டு.



இது   ரவீந்திரனின் கீழ்க்கண்ட பதிவுக்கான பின்னூட்டலாகும்.



ரவீந்திரனின் பதிவு:



சி.பி.எம்.ன் விவாதத்திலும் சரி புதிய கலாச்சாரத்தின் விவாதத்திலும் ஏகாதிபத்தியம் பற்றியோ காலனியாதிக்கம் பற்றியோ விவாதிகவில்லையே ஏன்
பிரிட்டீஷ் ஆட்சி இங்கு ஏற்படுவதற்கு முன்பு இந்து முஸ்லீம்களுக்கு இடையில் சண்டையோ கலவரமும்ஏ ற்படவில்லை. அவர்களின் ஆட்சியில்தான் இந்த மதங்களுக்கு இடையில் கலவரம் உருவாக்கப்பட்டது இதற்கு சேவை செய்த கோட்பாடுதான் ஆரிய இனவியல் கோட்பாடு. பார்ப்பனர் எதிர்ப்பை முதன்மை படுத்தி காலனியாதிக்க எதிர்பை திசைதிருப்பினார்கள் அதற்கு பயன்பட்ட கோட்பாடுதான் திராவிட இனவியல் கோட்பாடாகும்
இப்படி நாம் சொல்வதால் ஆரிய மற்றும் திராவிட மரபு இனங்கள் இங்கு இருந்ததை நாம் மறுப்பதாக எடுத்துக்கொள்வது தவறாகும். இங்கு அந்த மரபு இனங்கள் இருந்தது உண்மை
உற்பத்தி வளர்ச்சிப்போக்கில் அந்த இனங்கள் ஒன்று கலந்து உபரி உற்பத்தியை யார் கைப்பற்றுவது என்ற சூழலில் மக்களிடம் வேறுபாடுகள் ஏற்பட்டபோது வர்ணங்களாக மக்கள் பிளவுபடுத்தப்பட்டனர் பின்பு சாதிகளாக பிளவு படுத்தப்பட்டனர். இதில் பார்ப்பன சாதியினர் நிலவுடமை சக்திகளாக ஆதிக்க நிலையில் இருந்தனர். இவர்கள் மட்டுமல்லாமல் வேளாளர் சாதியைச் சேர்ந்தவர்களும் ஆதிக்கசக்திகளாக இருந்தனர். இவர்களை எதிர்த்து விவசாயிகள் போராடியுள்ளனர். இந்தவகையில் இந்திய உழைக்கும் மக்களுக்கு எதிரான ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடவேண்டும் எமக்கு கருத்து வேறுபாடு இல்லை
ஆனால் உள்ளூர் ஆதிக்க சக்திகள் பார்ப்பனர்கள் மட்டும்தான் என்பது உண்மை இல்லை. ஆகவே அதனை நாம் ஏற்க முடியாது. அதேபோல் நமது நாட்டை கொள்ளையடித்து வரலாறுகாணாத அளவு வறுமையையும் தற்கொலை சாவுக்கும் காரணமான அன்னிய காலனியாதிக்க கூட்டத்தை எதிர்த்த போராட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்களையும் நாம் ஏற்க முடியாது
இதுபோன்ற காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் கோட்பாடுதான் இனவியல் கோட்பாடாகும். இந்த கோட்பாட்டை ஐரோப்பியர்கள் இந்தியாவில் மட்டுமல்ல ஆசிய ஆப்பிரிக்க தென்அமெரிக்க நாடுகளில் உருவாக்கி அங்கெல்லாம் தற்போதும் இனங்களுக்கு இடையில் மோதல்களை உருவாக்கி புதியகாலனியத்தை பாதுகாக்கிறார்கள்
ஆதிக்க சக்திகள் பார்ப்பன சாதியிலும் உண்டு.பிற சாதியிலும் உண்டு. ஆதிக்க சக்திகள் வர்க்கமாகவே ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள் ஆகவே பார்ப்பன எதிர்ப்பு பேசுபவர்கள் வர்க்கப் போராட்டத்தை மறுக்கிறார்கள். அவர்கள் வர்க்க எதிரிகளை மக்களுக்கு சுட்டிகாட்டுவதில்லை. ஆகவே சமூக பிரச்சனைகளை அறிவியல்பூர்வமாக தீர்ப்பதற்கான மார்க்சியத்தை மறுக்கிறார்கள்.


https://www.facebook.com/ravindran.ravindran.700/posts/468420413500829

No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...